News

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து – 16 பேர் பலி

 

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது.

இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு, மீட்புப்பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top