News

சுவீகரிக்கப்பட்ட குருந்தூர்மலை காணியை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணிலின் உத்தரவு!

தமிழர் தாயகத்தில் உள்ள மிக முக்கியமான வரலாற்றுத் தளங்களில் ஒன்றான முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆலயத்தின் மேற்கு எல்லையில் தொல்பொருள் திணைக்களத்தினால் 229 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தக் காணியில் புத்தர் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புத்தர் சிலையும் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் காணியையும் உடனடியாக விடுவித்து உரியவர்களுக்கு வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top