வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்களின் இருப்பு திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் முதலில் வெளிவர வேண்டும்.
அதனை விடுத்து செயற்பட்டால் உலகில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்தாலும் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் சுதந்திரமாக, நிம்மதியாக வாழும் சூழல் இந்த மண்ணில் உள்ளதா?
பல்வேறு கட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்வியல் கட்டமைப்பில் ஒரு அனுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.