புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மூழ்கும் ஐந்தாவது படகு இதுவாகும், இதில் ஏழு பேர் மரணமடைந்துள்ள நிலையில் மொத்தம் 67 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
துனிசியாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலையில் இருந்து தப்பவே ஆப்பிரிக்க மக்கள் இத்தாலி நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
பல ஆப்பிரிக்க குடிமக்கள் இன்னும் வீடற்றவர்களாகவும் வேலையற்றவர்களாகவும் உள்ளனர் மேலும் சிலர் இன்னும் இனவெறி தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள்.
துனிஸில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமைக்கு வெளியே, டசின் கணக்கான ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் தாங்கள் வாழ்ந்த தற்காலிக முகாமில் இந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
துனிசியா பாதுகாப்பான நாடு அல்ல, இந்த நிறத்தில் இருக்கும் மக்களுக்கு இங்கு எதிர்காலமும் இல்லை என ஆப்பிரிக்க மக்கள் கொந்தளித்துள்ளனர்.