News

நாசா கண்டுபிடித்த புதிய கிரகம்!

விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகத்தில் ‘மணல்’ மேகங்கள் உள்ளன என்றும் அதன் வட்டப்பாதையில் உள்ள 2 நட்சத்திரங்களையும் சுற்றி வருகின்றதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மேகங்களை அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்ததாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.

மேலும், இக்குழு, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, பிரபஞ்சத்தின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் படங்களை எடுத்து வந்தது.

இந்த கிரகத்தில் ‘மணல் மேகங்கள்’ தவிர, தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top