பிலிப்பைன்சில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மிண்டோனோ தீவில் மர்குஷன் நகரில் இன்று மதியம் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. சமீபத்தில் துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.