News

மீண்டும் ஆரம்பமாகிறதா சுமந்திரனின் ஆட்டம் – தகர்க்கப்படுமா சம்பந்தனின் கோட்டை!

சம்பந்தனின் கோட்டையாக கருதப்படும் திருகோணமலையில், தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான வேலைகளில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழரசு கட்சி அமைப்பாளர் குகதாசனுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவுக்கு சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளும் தனிப்பட்ட தீர்மானங்களுமே காரணம் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், இந்த செயற்பாடு தமிழரசுக்கட்சிக்குள் பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக தமிழரசு கட்சியின் தலைமைக்கு நெருக்குவாரங்கள் அதிகரித்திருக்கின்றன. தமிழ் தேசிய பரப்பில் வெற்றிடமாக காணப்படும் தலைமைக்கான போட்டியில் பலரும் இறங்கியிருக்கும் நிலையில், தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

அதற்கான ஏற்பாடுகள் திருகோணமலை சாம்பல் தீவு பிரசேத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல்,ஏனைய பிரதேசங்களிலும் தமிழரசு கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வெளியேற்றி வருவதாகவும் அறியமுடிகிறது.

தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக உழைத்து வந்தவர்களையும் அந்த கட்சியை தங்களுடைய மூச்சாக எண்ணி செயற்பட்டு வந்தவர்களையும் வெளியில் போடுவதால் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top