ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் மரத்தில் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் வடக்கு மாகாணமான கெமிசெட்டில் ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
ஆரம்பத்தில் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் பெண் விவசாயத் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.