யாழ்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற 4 பேர் அடங்கிய குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த நான்கு பேரையும் யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் இன்றைய தினம் (07-03-2023) கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கனடாவில் இருந்து 2 லட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.