இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 7 மாடி கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு ஒட்டுமொத்த கட்டடமும் நிலைகுலைந்துள்ளது.
இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டடத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த இரசாயன பொருட்கள் தீப்பற்றி வெடித்தமையே விபத்திற்கான காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.