ஸ்காட்லாந்தில் கரையில் நின்ற கப்பல் கடுமையான காற்று வீசியதில் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் அமைந்த கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
ஆராய்ச்சி கப்பலான அதில் பயணிகள் இருந்து உள்ளனர். இந்நிலையில், கப்பல் திடீரென சரிந்தது. இதனால், கப்பலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சமடைந்து அலறினார்கள்.
இந்த சம்பவத்தில் சிக்கி, 25 பேர் வரை காயம் அடைந்தனர். அவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 பேருக்கு அந்த இடத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 5 ஆம்புலன்சுகள், ஒரு வான்வழி ஆம்புலன்சு, 3 சிகிச்சை குழுக்கள், ஒரு சிறப்பு அதிரடி படை, 3 துணை மருத்துவ பணி குழுக்கள் மற்றும் நோயாளிகளை சுமந்து செல்லும் வாகனம் ஒன்று ஆகியவை சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பலத்த வேகத்தில் வீசிய காற்றால் கப்பல் சரிந்து உள்ளது என கூறப்படுகிறது.