News

அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி விருந்து சாப்பிட்ட நபர்

 

 

அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர், வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த சம்பவத்தை நடத்தியுள்ளார்.

வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகக் கருதிய பால் ஆண்டர்சன், மனித இதயத்தை வைத்து பரிகாரம் செய்தால், கெட்டது விலகும் என புத்தகம் ஒன்றில் படித்துள்ளார்.

அதனை நம்பிய அவர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 41 வயதான ஆண்ட்ரியா பிளாக்கென்ஷிப் என்ற பெண்ணை கொலை செய்துள்ளார்.

அப்போது தடுக்க முயன்ற ஆண்ட்ரியாவின் தந்தை மற்றும் 4 வயது மகனையும் கொலை செய்துள்ளார். பின்னர், ஆண்ட்ரியாவின் இதயத்தை தனியாக வெட்டி எடுத்து, ஆண்டர்சன் பரிகாரம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இதயத்தை வெட்டி, அதன் மேல் மசாலா மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளார். இதன் பின் புகார் ஒன்று அளிக்கப்பட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பிணையில் வெளியே வரமுடியாத நிலையில், வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top