பெருவில் பஸ்-ஆட்டோ இடையே நடந்த மோதலில் 13 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு ஒரு பஸ் சென்றது. இந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.
அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. அப்போது பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சும், ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.