News

அணுசக்தி மோதல் ஏற்படலாம் என அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதன் காரணமாக அமெரிக்கா அணுசக்தி மோதலுக்கு நெருக்கமாக நகர்கிறது என ரஷ்யா எச்சரித்துள்ளது.

14 மாதங்களுக்கு முன்பு ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.

உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வரும் அமெரிக்கா, 70 பில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை கீவிற்கு வழங்கியது, அதில் 43 பில்லியன் டொலர்கள் அதன் இராணுவத்திற்கு சென்றது.

இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அணுஆயுத பரவல் தடையின் தலைவர் விளாடிமிர் யெர்மகோவ், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடனான அணுசக்தி மோதலுக்கு ரஷ்யா நெருக்கமாக நகர்கிறது என எச்சரித்துள்ளார்.

மேலும், இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையே நேரடி இராணுவ மோதலின் அபாயங்கள் படிப்படியாக வளர்ந்து வருவதாவும் அவர் கூறினார்.

அத்துடன் ரஷ்ய அரசு செய்தி நிறுவனத்திற்கு, ரஷ்யா ஒரு இடைநிலை மற்றும் குறுகிய தூர அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தில் இருந்து விலகலாம் என்றும் பரிந்துரைத்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top