அதிகாலை 3.30 மணியளவில் தாக்கிய சூறாவளியால் 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர சூறாவளி தாக்கியது. பொலிங்கர் நகரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சூறாவளி தாக்கியது. இதில், பல வீடுகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த சூறாவளியில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடந்த சில நாட்களுக்கு முன் டெலிவெர் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 32 பேரும், மிசிசிபி டெல்டா பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 26 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.