News

அமெரிக்காவில் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாகிச்சூடு – 9 பேர் படுகாயம்

டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top