News

அமெரிக்கா மெக்சிகோவில் பறக்கும் பலூனில் தீ- கீழே குதித்த 2 பேர் பலி

 

மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டது. அதில் 3 பேர் பயணம் செய்தனர்.

நடுவானில் பறந்த போது பலூனில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ராட்சத பலூனில் பயணிகள் அலறினார்கள்.

அப்போது 39 வயது பெண், 50 வயது ஆண் ஆகிய 2 பேர் பலூனில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுவனுக்கு முகத்தில் தீக்காயமும், வலது தொடையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top