News

இஸ்ரேல் பிரதமர் எதிராக பெரும் போராட்டம் – கடல் போல் வீதியை சூழ்ந்த மக்கள்!

 

நெதன்யாகு நீதித்துறை அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பதாக கூறி இஸ்ரேலில் பல கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர்.

இஸ்ரேலில் நிலவிவரும் பரபரப்பான சூழலுக்கு இடையே நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். நெதன்யாகு போரை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top