ரஷ்யாவின் லான்செட் காமிகேஸ் ட்ரோன்கள் உக்ரைனிய ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு உக்ரைனிய பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ஆயுதப்படைகள் அதன் புகழ்பெற்ற லான்செட் காமிகேஸ் ட்ரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இந்த லான்செட் ட்ரோன்கள் கடந்த நாட்களில் கெர்சன் பகுதியில் உக்ரைனின் நான்கு S-300 லாஞ்சர்களையும், ஆயுதப்படைகளின் Gepard-சுய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் வெடிமருந்துகள் உதவி கொண்டு அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தங்களின் போது உக்ரைனிய ஆயுதப்படையின் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்ததாகவும் பிராந்தியத்தின் அவசர சேவைகள் பிரதிநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஏப்ரல் 26ம் திகதி சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ ஆதாரங்களில், வான் பாதுகாப்பு அமைப்பின் உக்ரேனிய 9A330 TLAR-ஐ ரஷ்யாவின் தற்கொலை ட்ரோன்கள் தாக்கியது காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை “உக்ரைன் ஆயுத கண்காணிப்பு” என்ற ட்விட்டர் கணக்கு வெளியிட்டுள்ள நிலையில், இது உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ஏற்பட்டுள்ள முதல் உறுதிப்படுத்தப்பட்ட இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனுக்குள் உயர் மதிப்பு இலக்குகளை தாக்க ரஷ்யா தங்களது லான்செட் ட்ரோன்களுடன் ஈரானிடம் இருந்து பெறப்பட்ட காமிகேஸ் ஷாஹெட்-136 ரக ட்ரோன்களையும் உடன் விரிவாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
ஆனால் தாக்குதல் நடத்த லான்செட் மற்றும் காமிகேஸ் விமானங்களில் எத்தகைய மாறுபாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவில்லை.