News

“கிம் ஜாங் உன்-க்கு அணு ஆயுத பதிலடி” – அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியா அத்து மீறலில் ஈடுபட்டால் அந்த நாடு மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஆட்சியில் இருந்து கிம் ஜிங் உன்னை அகற்றுவோம் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது:-வடகொரிய தனது ஆயுதங்களை பயன்படுத்தினால் அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்வதோடு ஆட்சியின் தலைமையும் முடிவுக்கு வரும்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக வடகொரியா அணு ஆயுத தாக்குதலை முன்னெடுத்தால் அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top