தமிழர்களின் தொன்மையினை அழிக்கும் விடயத்திற்கெதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கெதிராகவும் தமிழர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளியிட வேண்டுமென சிவில் சமூக செயற்பாட்டாளரும் இந்து மதத்தலைவருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்களின் தொன்மையை அழிக்கும் விடயமாக சைவ ஆலயங்களை இலக்கு வைத்து அளிக்கும் செயற்பாடுகள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் அதன் தாக்கங்கள் தொடர்பிலும் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
ஆகவே இது தொடர்பாக மக்களிற்கு விழிப்புணர்வூட்ட பலமான எதிர்ப்பை வடகிழக்கில் காட்டுவதுடன் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நாம் எதிர்நோக்கி வரும் இனப்பிரைச்சினை தொடர்பில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள சூழல் , அங்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பிற்குள்ளே எமது எதிர்ப்பு கரைந்து சென்று விட கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதற்காக நாம் எதிர்கின்றோம் என்பதற்கான காரணத்தினை தென்னிலங்கையிலுள்ள சிங்களவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எதிர்ப்பு பயணத்தினை முன்னெடுத்து தொடர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.