News

சிரியாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்… பகிரங்கமாக அறிவித்த இஸ்ரேல் 

சிரியாவில் இருந்து தங்களது எல்லைக்குள் வந்த அடையாளம் தெரியாத விமானத்தை வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில், விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேலும், விமானத்தை வீழ்த்திய விவகாரம் எந்த நிலையிலும் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது எனவும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் மட்டும் சிரிய பிரதேசத்தில் இஸ்ரேல் ஆறு முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே, சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இரண்டாவது புரட்சிகர காவலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்துள்ள ஈரான், கட்டாயம் இஸ்ரேல் பழி தீர்க்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top