News

சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பேர் பலி

 சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 3 அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பயங்கரவாதிகள் பலியாகினர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல் ஷபாப், தலைநகர் மொகதீசுவில் சோமாலிய கூட்டாட்சி அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள பகுதிகளை அரசாங்கப் படைகளிடம் இழந்த பிறகு, சமீபத்திய மாதங்களில் இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களை இந்த குழு தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த துப்பாக்கி சண்டையின்போது எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top