புருண்டி நாட்டில் 13 சுரங்க தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள சிகிடோகி மாகாணத்தில் தொழிலாளர்கள் பலர் சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மழைக்காலம் என்பதால் ருகோகோ ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் தோண்டி வைத்த இரண்டு சுரங்க குழிகள் தண்ணீரால் நிரம்பின. மேலும் அவை இடிந்து விழுந்தன.
இதில் சிக்கிய 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது.