News

தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்கள்?

தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில், நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது விவாவதிக்கப்படவுள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top