தென் ஆப்பிரிக்காவின் வொர்செஸ்டர் நகரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் என்ற இடத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று நெளிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பயத்தை வெளிக்காட்டாமல் அருகில் இருந்த சக விமானியிடம் இதனை கூறினார்.
பின்னர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டது.
அங்கு தயாராக இருந்த மீட்பு படையினர் அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். விமானியின் சாமர்த்தியமான செயலால் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். எனவே அவரது இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.