ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தலிபான் அரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு தலிபான் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இஅந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்ஹா மாகாணத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தலிபான் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அந்த பதுங்கு இடங்களை குறிவைத்து தலிபான் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.