News

நார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

நார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

நார்வே நாட்டில் தற்போது 7 சதவீத நிலப்பரப்புகள் பனிச்சரிவு அபாயத்தில் உள்ளதாக வானியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அங்கு தினமும் பனிச்சரிவுகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நார்வே நாட்டின் வடக்கு பகுதியில் வீசிய பலத்த புயல் காற்றால் அங்கு தொடர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் அங்குள்ள ரெய்னோயா தீவில் ஒரு வீடு மற்றும் கொட்டகை கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் கொட்டகையில் இருந்த 140-க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போயின.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top