News

 பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு; 13 பேர் பலி- 50 பேர் படுகாயம்

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 13 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

காவல் நிலையத்திற்குள் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்புத்துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்று ஹயாத் கூறியுள்ளார்.

அந்த கட்டிடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் ஹயாத் கூறியுள்ளார். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top