பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியில் வசித்து வந்தவர் லியாம் டெய்லர்(37). இவருடன் கர்ப்பிணியான காதலி ஐலிஷ் வால்ஷ்(28) உடன் இருந்து வந்துள்ளார்.
டெய்லர் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தி வந்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள ஐலிஷ் முயன்றுள்ளார். 12 வார கர்ப்பமாக இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது லியாம் டெய்லர் அவரை கத்தரிக்கோலால் 40 முறை குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து டெய்லரை கைது செய்தனர்.
அப்போது அவர், ஒரு கணம் பைத்தியக்காரத்தனம் உங்கள் முழு வாழ்க்கையையும் எப்படி மாற்றும் என்பது வேடிக்கையானது என கூறினார்.
இதுதொடர்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘இன்னும் முழுமையான பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. கருவுற்ற காலத்தின் ஆதாரத்தைப் பொறுத்து டெய்லர் குழந்தைகளை அழித்ததாகக் குற்றம்சாட்டப்படலாம்’ என தெரிவித்துள்ளார்.
மே 10ஆம் திகதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும், தண்டனை திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.