உக்ரைன் – ரஷியா இடையே இன்று 405வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு ரஷியாவில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ்பர்க் நகர்ல் உள்ள உணவகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் பிரபல சமூகவலைதள பதிவாளர் வெல்டலன் டட்டார்ஸ்கை உயிரிழந்தார். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்த வெல்டன் டட்டார்ஸ் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை ஆதரித்து தனது டெலிகிராம் பக்கத்தில் பல்வேறு வீடியோக்கள், கருத்துக்களை பதிவிட்டு வந்தார். வெல்டன் டட்டார்சை டெலிகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
ரஷியாவின் போருக்கு ஆதரவாக உணவகத்தில் கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வெல்டன் டாட்டார்ஸ் பங்கேற்றுள்ளார். அவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலின் நிலை, மற்றும் பல்வேறு யோசனைகளையும் இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷியாவை சேர்ந்த திரிபுவா (வயது 26) என்ற பெண் கொண்டுவந்த பரிசுப்பொருளான சிறிய அளவிலான சிலையில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த பரிசுப்பொருளை திரிபுவா வெல்டனிடம் கொடுத்துவிட்டு உணவகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறிய சற்று நேரத்தில் வெல்டன் கையில் இருந்த குண்டு நிரப்பப்பட்ட பரிசுப்பொருள் வெடித்துள்ளது. இதில் வெல்டன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ரஷிய அதிகாரிகள் திரிபுவாவை கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.