News

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி – அறிமுகப்படுத்திய உக்ரைன் அரசு

 

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி ஒன்றை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியது

உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது. இதனை மறுத்த ரஷியா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக கூறியது.

இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top