News

மிகவும் ஆபத்தானவர்களின் பட்டியலை வெளியிட்ட பிரித்தானியா! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியாகியுள்ளது.

எனவே இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பெரும் குற்றவாளிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை தேசிய குற்றவியல் செயலாண்மை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு தப்ப முயன்ற பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 6 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மிகவும் ஆபத்தான 24 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை உலகம் முழுவதும் தேடப்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களை நீதிக்கு முன் நிறுத்த பொதுமக்களின் உதவி தேவை எனவும் தேசிய குற்றவியல் செயலாண்மை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top