News

முஸ்லிம்களின் காணியை அபகரிக்க முயன்ற பௌத்த தேரர்கள்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

 

 

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் முஸ்லிம் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளி துமளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் [01.04. இடம்பெற்றுள்ளதுடன், ஒரு வார காலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம்பெற்றது.

குறித்த காணிக்குள் பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலுடன் சென்றிருந்த வேளையில் பொது மக்களை மெய்பாதுகாவலன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார்.

புல்மோட்டை அரிசிமலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top