ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆட்டங்களை மீண்டும் ஆடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் சஜித் பிரேமதாச உரையாற்றும் பொதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தினால் வறிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணங்களை மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்களும் வேறு சில கட்சிகளை சேர்ந்தவர்களும் சேர்ந்தே, மக்களுக்கு விநியோகிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், கட்சி அரசியலை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதன்போது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் போது சஜித்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்த போதும் சஜித் அதனை மறுத்திருந்தார். அதாவது சொல்வதை தான் செய்வதாகவும் எனவே தன்னுடன் இணைந்து பயணிக்குமாறு எதிர்கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இந்த உத்தேச கருத்துகளை ஏற்கப்போவதில்லை என்றும் ஒருபோதும் இணைந்து செயற்பட தாம் தயாரில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.