News

லிபியாவில் படகு கவிழ்ந்து 55 அகதிகள் கடலில் மூழ்கி பலி

 

லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 55 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகினர்.

ஆப்பிரிக்க நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு பயணம் செய்யும்போது கடல் வழியாக சட்ட விரோத பயணம் மேற்கொள்வதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிவடைகின்றன.

அந்த வகையில் சம்பவத்தன்று லிபியாவின் தலைநகரான திரிபோலி அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள கராபௌலியில் இருந்து 60-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் கடலில் மூழ்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 55 பேர் உயிரிழந்தனர். மாயமான சிலரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top