பிரித்தானியாவில் வீடு புகுந்து 9 வயது சிறுமியை கொன்ற நபருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகத்து மாதம் 22ஆம் திகதி, லிவர்பூலின் டோவ்காட்டில் உள்ள போதைப்பொருளை விநியோகிக்கும் ஜோசப் நீ என்ற நபரை கேஷ்மேன் என்பவர் துரத்திச் சென்றுள்ளார்.
அப்போது ஒரு வீட்டினுள் நுழைந்த ஜோசப்பை நோக்கி கேஷ்மேன் துப்பாக்கியால் சுட்டபோது, ஒலிவியா என்ற 9 வயது சிறுமி பரிதாபமாக உரியிழந்தார். மேலும் சிறுமியின் தாயார் இதில் காயமடைந்தார்.
இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி கேஷ்மேனுக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், ‘தனது மகளின் எதிர்காலத்திற்கான வாக்குறுதி அனைத்தும் மிகவும் கொடூரமாக பறிக்கப்பட்டது.
இப்போது என் மகளுக்கு அருகில் போக நான் கல்லறைக்கு செல்ல வேண்டும். என் சிறிய நிழலில், என் இதயத்தில் அவள் எங்களுடனே எப்போதும் வாழ்வாள் என்று நான் அவளிடம் கூறுவேன்’ என தெரிவித்துள்ளார்.