News

அமெரிக்காவில் புயல்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி – 7 பேர் படுகாயம்

மெரிக்காவில் வீசிய கடும் புயல் காரணமாக உருவான கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. இதனால் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசி ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்த இயற்கை சீற்றத்தால் நகரின் பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மழைப் பொழிவின்போது புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது. வீடு கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். அவர்களில் அழுகூரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

வீட்டின் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது தெரிந்தது. இடிபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹூஸ்டனுக்கு வடக்கே ஏற்பட்ட இந்த பலத்த சூறாவளி புயலால் வீடுகளை இழந்தோர், பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top