இலங்கை யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமது கட்சி வலிறுத்துகின்றது என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமது கட்சி வலிறுத்துகின்றது.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற மிருகத்தனமான கொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் எண்ணற்ற ஐ.நா தீர்மானங்களை மீறுவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.