News

எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது – ஜோ பைடன் திட்டவட்டம்!

ஜி7உச்சிமாநாட்டின் இறுதி நாளான நேற்று உக்ரைனை ஆதரிப்பதில் “எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது” என ஜோ பைடன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபரின் பங்களிப்பானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக பார்க்கப்பட்டது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பைடன்,

”மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட F-16 போர் விமானங்கள் ரஷ்ய எல்லைக்குள் செல்லாது என்று கிவ்வில் இருந்து உத்தரவாதம் கிடைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்தில் உள்ள விரிசல்கள் ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவுகின்றன.

உக்ரைனால் கோரப்பட்ட சக்திவாய்ந்த போர் விமானங்களை, ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் பகுதிக்குள் எங்கிருந்தாலும் பயன்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வரும் வாரங்களில் உக்ரைனிய தாக்குதலில் விமானங்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் சாத்தியமற்ற விடயமாக பார்க்கப்படும்.

எனினும் துருப்புக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அத்தகைய ஆயுதங்கள் தேவைப்படலாம்.” என தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் அமெரிக்க அரசு உக்ரைனுக்கு பீரங்கி மற்றும் கவச வாகனங்கள் உட்பட 375 மில்லியன் அமெரிக்க டொலர்கள்(£301m) இராணுவ உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top