News

ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இதில், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து அவர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அண்மையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக விசேட அறிக்கையாளர்கள் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.

அத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பிலும் அவர்கள் வினாக்களை தொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச நியமனங்களுக்கு இணங்க பயங்கரவாதம் பற்றிய வரையறைகளை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்குமாறும், குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை பாதிக்கும் போது, துல்லியமான மற்றும் சட்ட உறுதியை உறுதிப்படுத்துமாறும், சிறப்பு அறிக்கையாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தன்னிச்சையான சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், தடை செய்வதற்கும், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல்போவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விரிவான உரிய செயல்முறை மற்றும் நியாயமான உத்தரவாதங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் Fionnuala Ní Aoláin, Mathew Gillett, Aua Baldé, Irene Khan, Clement Nyaletsossi Voule, Mary Lawlor, Margaret Satterthwaite, Fernand de Varennes, Nazila Ghanea, kw;Wk; Alice Jill Edwardsஆகிய சிறப்பு அறிக்கையாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top