News

கிழக்கு எம்.பிகளுக்கு அழைப்பில்லையேல் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிப்போம் – தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை என்றால் அவருடன் இடம்பெறவுள்ள சந்திப்பை வடக்கு எம்.பிக்கள் புறக்கணிப்பர் என தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சிகள் மற்றும் இதர தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

11ம் 12ம் 13ம் திகதிகளில் அதிகாரப் பரவலாக்கல், வடக்கிலுள்ள பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாட வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் எம்.பிக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் கருதப்படுவதால் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றால் குறித்த பேச்சுவார்த்தையை கூட்டாக புறக்கணிப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top