News

கொசோவா நாட்டில் நேட்டோ படையினர் மீது தாக்குதல்; 40 வீரர்கள் காயம்

கொசோவா நாட்டில் நேட்டோ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் காயமடைந்தனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவாவில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிவேகன் நகரில் அல்பேனியர் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த செர்பியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ படை அங்கு விரைந்தது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் நேட்டோ படையினர் மீது கற்களை எறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட நேட்டோ வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் 50 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top