ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை கொண்டு வருவதற்கு சிலர் தயாராகி வரும் நிலையில் கட்சிக்குள் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் நடைபெற்ற பேரணியில் பசில் ராஜபக்சவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறித்தும் அக்கட்சியின் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நற்பெயரை அழிக்கும் நடவடிக்கை என சிலர் குற்றம் சுமத்துவதாகவும், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பசில் ராஜபக்சவுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல் கூறுகின்றது.
எனினும் பசில் ராஜபக்சவின் தலையீட்டினால் கட்சியின் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், தலைமை மாற்றம் ஏற்பட்டால் அது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.