News

தனுஷ்கோடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் உலகதமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மகனின் உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்சவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்.

மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என அஞ்சலி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top