News

தமிழ் அரசின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாட அழைப்பு

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் மே 11, 12, 13 ஆகிய தினங்களில் கலந்துரையாட வருமாறு வடக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான அழைப்பு கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்றுச் சென்று ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முன்னதாக அது குறித்து ஆராய்வதற்குத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மே 8 ஆம் திகதி தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு வீட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என தெரிவித்ததுடன் ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் இக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அழைப்பை ஏற்று அதில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய தினம் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் கூட்டான ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top