மத்திய பிரதேஷத்தில் பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசம், கர்கோன் மாவட்டத்தில் இந்தூர் நோக்கி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த பாலத்தின் மேல் சென்ற போது திடீரென பேருந்து ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது.
இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் சிவ்ராஜ் சிங் வர்மா நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சத்தை நிவாரண நிதியாக வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.