வீட்டில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வாஷிங்டன், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் பெ செயிண்ட் லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது, இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 வயது இளைஞன் சக மாணவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞர், 16 வயது சிறுவன் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கெமரூன் எவரஸ்ட் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.