News

பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்

74 வயதான மூன்றாம் சார்லஸ் இன்று பிரித்தானியா மற்றும் 14 பிற கொமன்வெல்த் நாடுகளின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், பரிசுத்த நற்செய்தியின் மீது கைவைத்து மூன்றாம் சார்லஸ் மன்னர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

அவர் தனது வாக்குறுதிகளை செயல்படுத்தவும், நிறைவேற்றவும் உறுதியளித்த அவர், தேவாலயங்கள் உட்பட சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த விழாவில், கேன்டர்பரி பேராயர், மிகவும் மரியாதைக்குரிய ஜஸ்டின் வெல்பி முடிசூட்டு பிரமாணத்தை செய்து வைத்தார்.

விழாவில் 100 நாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்

z  

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top