News

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழர்கள்

இறுதி யுத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினர் 14ஆண்டு முள்ளிவாய்க்கால் நிணைவுதினத்தையும் ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் தாய்மார்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top